உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அரக்கோணத்தில் 2 பேர் அடுத்தடுத்து தற்கொலை

Published On 2022-06-15 14:56 IST   |   Update On 2022-06-15 14:56:00 IST
  • 14 நாட்களில் 6 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்
  • தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுற்றியுள்ள பகுதியில் இந்த மாதம் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக கடந்த 14 நாட்களில் 6 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இதில் கிராமப் பகுதியை சேர்ந்த 3 பெண்கள் நகரப்பகுதியில் 3 ஆண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் அரக்கோணம் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த கருணாமூர்த்தி (வயது59) உடல் நிலை சரியில்லாதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதேபோல தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்த மோகன்ராஜ் (32 ) காமராஜ் நகரில் வசித்து வந்தார்.இவர் குடும்பத்தகராறு காரணமாக வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரக்கோணம் பகுதியில் இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு பெரும் வேதனையடைந்துள்ளனர்.

Tags:    

Similar News