உள்ளூர் செய்திகள்

புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தினை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்.

மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000

Published On 2022-09-06 14:42 IST   |   Update On 2022-09-06 14:42:00 IST
  • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்
  • 1,368 மாணவிகள் பயன் பெறுகின்றனர்

வாலாஜா:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த 15 கல்லூரிகளில் உயர் கல்வி படிக்கும் 1,368 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவி தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தினை தொடங்கி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி வாழ்த்துரை வழங்கினர்.

மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புதுமைப்பெண் திட்டத்தினை தொடங்கி வைத்து வங்கி டெபிட் கார்டு மற்றும் வாழ்க்கை வழிகாட்டு புத்தகப் பைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். 

Tags:    

Similar News