உள்ளூர் செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

Published On 2022-08-28 06:52 IST   |   Update On 2022-08-28 06:52:00 IST
  • ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
  • கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை கொண்டு சென்றது.

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது எல்லையை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 6 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 பேரையும் முகாமுக்கு இலங்கை கடற்படை கொண்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் இன்னும் இந்தியா திரும்பாத நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News