உள்ளூர் செய்திகள்

வீரஜக்கதேவி கோவிலில் வழிபாடு

Published On 2023-05-13 13:26 IST   |   Update On 2023-05-13 13:26:00 IST
  • வீரஜக்கதேவி கோவிலில் வழிபாடு செய்தனர்.
  • வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பசும்பொன்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் இருந்து திரளானோர் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வீரஜக்கதேவி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர்.

கமுதி அருகே உள்ள பெரியஉடப்பங்குளம் கிராமத்தில் இளைஞர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஜோதி ஏந்தி, பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் உள்ள வீர ஜக்கதேவி கோவிலில் வழிபாடு நடத்தினர்.

இதேபோல் இந்த பகுதியில் உள்ள தலைவ நாயக்கன்பட்டி, கீழராமநதி,சேதுராஜபுரம், நாராயணபுரம், கீழவலசை பாக்குவெட்டி, புதுக்குளம், கோவிலாங்குளம்பட்டி, இடையன்குளம், தாதாகுளம் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஜோதி ஏந்தி வீரஜக்கதேவி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.

கமுதி அருகே பெரிய உடப்பங்குளத்தில் வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News