உள்ளூர் செய்திகள்

தேவர் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க வலியுறுத்தல்

Published On 2022-10-31 08:05 GMT   |   Update On 2022-10-31 08:05 GMT
  • ராமநாதபுரத்தில் பசும்பொன் தேவர் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும்.
  • அனைத்து மறவர் நல கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

பரமக்குடி

பசும்பொன் முத்துராம லிங்க தேவர் குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அனைத்து மறவர் நல கூட்டமைப்பு மற்றும் செம்பிய நாடு மறவர் சங்கம் சார்பில் பசும்பொன்னில் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. அனைத்து மறவர் நல கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், ஓய்வு பெற்ற காவல் துறை ஐ.ஜி.யுமான விஜயகுமார் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி. துரைச்சாமி, செம்பிய நாடு மறவர் சங்கத் தலைவர் சி. எம். டி. ராஜாஸ் சேதுபதி, மலேசியா முக்குலத்தோர் சங்கத்தலைவர்-தொழில் அதிபர் குணாத்தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவையொட்டி ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் புகைப்படம் பொறித்த ரூபாய் நோட்டுகளை வெளியிட வேண்டும் என்றும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், அவரின் நினைவாக ராமநாதபுரத்தில் பசும்பொன் தேவர் பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்றும், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்றும் மத்திய-மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அனைத்து மறவர் நல கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் செம்பிய நாடு மறவர் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News