உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கும் மாணவர்கள்.

பயிற்சி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை

Published On 2023-04-16 06:54 GMT   |   Update On 2023-04-16 06:54 GMT
  • பயிற்சி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
  • பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனை மாவட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ மனைக்கு ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் பணியில் உள்ள மூத்த மருத்துவர்கள் சிகிச்சைக்கு வராமல் பயிற்சி மருத்துவ மாணவர்கள் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு உள்ளது.

இது குறித்து மருத்துவ மனை நிர்வாகம் சார்பில் பணி நேரம் குறித்து தெளிவான அறிக்கை வெளியிட்டும், பலமுறை எச்சரித்து உத்தரவுகள் பிறப்பித்தும் யாரும் கணடுகொள்ள வில்லை.

மேலும் மருத்து வமனை மருந்தகத்தில் ஒரு மூத்த மருந்தாளுனர் கூட இல்லாமல் பயிற்சி மருத்துவ மாணவர்களை வைத்து மருந்து வழங்கப்படுகிறது. இதன் மூலம் மருந்துகளை மாற்றி வழங்கும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது.

சிகிச்சைக்காக வருபவர்களில் பெரும்பாலானோர் பாமர மக்கள் என்பதால் பயிற்சி மாணவர்கள் வழங்கும் மருந்தின் விபரம் அறியாது அதனை சாப்பிட்டு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

எனவே ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அரசு மருத்துவ மனையில் ஆய்வு செய்து மருந்தகத்தில் மூத்த மருந்தாளுனர்களை நியமித்து, பணிக்கு வராமல் இருக்கும் மருத்துவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News