உள்ளூர் செய்திகள்

விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். அருகில் கலெக்டர் விஷ்ணு சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் உள்பட பலர் உள்ளனர்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்

Published On 2023-11-21 05:33 GMT   |   Update On 2023-11-21 05:33 GMT
  • 2,394 பயனாளிகளுக்கு ரூ.20.70 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
  • கிராமங்களை பொறுத்தவரை வளர்ச்சிக்கு கூட்டுறவுத்துறை மிக முக்கியமான பங்களிப்பாக இருந்து வருகின்றது.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார். எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம், முருகேசன் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் ராஜகண்ணப் பன் கொடி ஏற்றி வைத்து சிறந்த கூட்டுறவு சங்கங்க ளுக்கு கேடயங்கள் வழங்கி னார்.

பின்னர் அவர் பேசிய தாவது:-

கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிக்கு முதலில் வித்திட்டவர் கலைஞர். அவர் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற காலத்தில் தான் கூட்டுறவு சங்கங்கள் துவங்கப்பட்டு தற்பொழுது சிறந்து விளங்கி வருகின்றன. அதுமட்டுமின்றி பெண்களுக்கு சொத்து உரிமை பெற்று தந்தவர் கலைஞர். தற்பொழுது பெண்களுக்கு சம உரிமை தந்து சாதனை படைத்தவர் முதல்-அமைச்சர் தான்.

மேலும் பெண்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கான அரசு நலத்திட்ட உதவிகள், மாதாந்திர உதவித் தொகை, கட்டணமில்லா பஸ் வசதி என எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் வழங்கி வருகிறார். கிராமங்களை பொறுத்தவரை வளர்ச்சிக்கு கூட்டுறவுத்துறை மிக முக்கியமான பங்களிப்பாக இருந்து வருகின்றது. இத்தகைய துறையே மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக இத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் 184 கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான விவசாய கடன், தொழில் கடன், நகை கடன், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் திட்ட உதவிகள் வழங்கி வருவதுடன், மாவட்டத்தில் 745 நியாய விலைக்கடைகள் மூலம் மக்களுக்கு தேவை யான உணவு பொருட்கள் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கூட்டுறவு வார விழா தொடர்பான உறுதிமொழி அமைச்சர் ராஜகண்ணப்பன் தலை மையில் மேற்கொள்ளப் பட்டது. அதனை தொடர்ந்து 2,394 பயனாளிகளுக்கு ரூ.20.70 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மனோ கரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணை தலைவர் பிரவீன் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News