உள்ளூர் செய்திகள்

 தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முருகேசன், முதல்வர் ஸ்டாலினுக்கு புத்தகம் வழங்கி நன்றி தெரிவித்தார்.

முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர்

Published On 2023-10-29 08:59 GMT   |   Update On 2023-10-29 08:59 GMT
  • தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
  • அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டது

ராமநாதபுரம்

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் சென்னை தமைமை செயலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் கூறியதாவது:-

தமிழக முதலமைச்சர் தமிழக அரசின் அச்சாணி யாக இருந்து வரும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணை யான 4 சதவீத அகவிலைப் படி உயர்வு ஜுலை 1 முதல் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு 16 லட்சம் அரசு ஊழியர் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி உள்ளார்.

கடந்தாண்டில் 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என எதிர் பார்த்த நிலையில் 3 சதவீத உயர்வு வழங்கி முதல்-அமைச்சர் ஆச்ச ரியத்தை ஏற்படுத்தினார். இந்த நிலையில் தற்ேபாது 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்ததுடன் ஜூலை- அக்டோபர் இடையிலான 4 மாதங் களுக்கான நிலுவைத் தொகையையும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தது. அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கும் பழைய ஓய்வூதியத் திட்டம், சரண்டர் விடுப்பு ஒப் படைப்பு, உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு போன்ற எங்களின் கோரிக் கைகளையும் படிப்படியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

முதல்-அமைச்சரை, எங்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கி ணைப்பாளருமான தியாகராஜனுடன் தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News