உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரம் அருகே புத்தேந்தல் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அருகில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரபாகரன் உள்பட பலர் உள்ளனர்.

மருச்சுக்கட்டி தடுப்பணை நடப்பாண்டில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- கலெக்டர் தகவல்

Published On 2023-11-02 07:23 GMT   |   Update On 2023-11-02 07:23 GMT
  • மருச்சுக்கட்டி தடுப்பணை நடப்பாண்டில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
  • இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் புத்தேந்தல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணுசந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

இதுபோன்ற கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் பொழுது பொதுமக்கள் முழுமையாக கலந்து கொண்டு வளர்ச்சிக்கும், தனிநபரின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அரசு வழங்கும் திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்திட வேண்டும்.

பொதுமக்கள் முக்கிய கோரிக்கையான மருச்சுக்கட்டி தடுப்பணை நடப்பாண்டில் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள் ளப்படும். அதேபோல் காவேரி கூட்டு குடிநீர் இணைப்பு வரும்வரை ஆழ்துளை கிணறு மூலம் தேவையான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் கூரியூர் கிராமத்திற்கு பஸ் நிறுத்தம், புதிய நியாய விலைக்கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும், கிராம சாலைகள் சீரமைக்கவும், தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைக்கவும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கால்நடைத்துறை, வேளாண்மைத்துறை மூலம் பொதுமக்களுக்கு தேவை யான திட்டங்களை கால தாமதமின்றி செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியுடைய பயனாளிகளுக்கு மேல்முறையீட்டில் உரிமைத் தொகை பெற்று தரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரபா கரன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சரஸ்வதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தோசம், ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம், ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தாமரை செல்வி, சேவுகப்பெருமாள், செயல் அலுவலர் முத்துராமலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News