உள்ளூர் செய்திகள்

கீழக்கரை தாசீம்பீவி மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா

Published On 2023-03-02 08:28 GMT   |   Update On 2023-03-02 08:28 GMT
  • கீழக்கரை தாசீம்பீவி மகளிர் கல்லூரியில் 35-வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
  • முன்னதாக கல்லூரியின் 3-ம் ஆண்டு உளவியல் துறை மாணவிபாத்திமா நவுரா வரவேற்றார்.

கீழக்கரை

கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 35-வது விளையாட்டு விழா நடந்தது. கல்லூரி செயலாளர் காலித் ஏ.கே.புஹாரி தலைமை வகித்து கல்லூரி கொடியை ஏற்றினார்.

ராமநாதபுரம் மாவட்ட கடற்படை நலன் மற்றும் ஆரோக்கிய சங்கத்தின் தலைவர் சேட்னா விக்ராந்த் ஷெப்னி தேசியக்கொடியையும், சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியின் முன்னாள் முதல்வர் ரோஷி பெர்னான்டோ, தாசிம்பீவி கல்லூரியின் முன்னாள் மாணவி ஜெய்னம்பு பாத்திமா ஆகியோர் ஒலிம்பிக் கொடியையும் ஏற்றினர்.

கல்லூரி முதல்வர் சுமையா முன்னிலை வகித்தார். இதில் மாணவிகளின் அணிவகுப்பு நடந்து. ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து 100, 200, 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்கள், சாகசங்கள், உடற்பயிற்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக கல்லூரியின் 3-ம் ஆண்டு உளவியல் துறை மாணவிபாத்திமா நவுரா வரவேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவிகளுக்கு செயலாளர் காலித் ஏ.கே.புஹாரி, ஆரோக்கிய சங்கத்தின் தலைவர் சேட்னா விக்ராந்த் ஷெப்னி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

முடிவில் மாணவி நூரூர் ருஸ்லா நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சுமையா, சீதக்காதி அறக்கட்டளையின் துணை பொது மேலாளர் சேக் தாவூத் கான் ஆலோசனையின் பேரில் பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News