உள்ளூர் செய்திகள்

கோடை காலத்தில் பயறு வகைகளை விதையுங்கள்

Published On 2023-05-20 07:52 GMT   |   Update On 2023-05-20 07:52 GMT
  • கோடை காலத்தில் பயறு வகைகளை விதையுங்கள் என வேளாண் அதிகாரி வலியுறுத்தினார்.
  • இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

பசும்பொன்

ராமநாதபுரம் மாவட்ட வேளாண் உதவி இயக்குநர் சிவராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்போது கோடை மழையை பயன்படுத்தி நெல் தரிசில் பயறு விதைப்பதால் மழை நீர் ஆவியாவது தடுக்கப்பட்டு பயிர் வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும். பயறுவகை பயிர்களின் வேர் முடிச்சில் காணப்படும் ரைசோபியம் என்ற பாக்டீரியா காற்றில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்தும். எனவே மண்ணிற்கு தழைச்சத்து கிடைக்கிறது. பயறுச்செடிகள் கால்நடைகளுக்கு உணவாக பயன்படும். காய்ந்த இலை சருகுகள் மண்ணில் அங்ககத் தன்மையை அதிகரிக்கும். களைச் செடிகள் முளைப்பது கட்டுப்படுத்தப்படும்.

எனவே விவசாயிகள் பயறு வகைகள் விதைக்க கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். வேளாண் விரிவாக்க மையத்தில் 65 முதல் 75 நாட்களில் விளையக்கூடிய வம்பன் 8 மற்றும் வம்பன் 10 உளுந்து 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News