உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை

Published On 2022-08-19 09:21 GMT   |   Update On 2022-08-19 09:22 GMT
  • அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர்.

அருப்புக்கோட்டை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சுற்றுப்புற கிராமத்தில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதில்லை. மேலும் இருக்கும் மருத்துவரை மாற்று பணி இடத்திற்கு அனுப்புவதால் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இருதயம், மூளை நோயால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நிரந்தர மருத்துவர்கள் இல்லாததால் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் சிரமப்படுகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு அறிவிப்பாகவே உள்ளது. தலைமை மருத்துவமனைக்கு உண்டான எந்த ஒரு வசதிகளும், செயல்பா–டுகளும், நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நோயாளிகள் குற்றம் சாட்டினர். இங்குள்ள ஸ்கேன் கருவி 2, 3 நாட்களாகவே பழுதடைந்து உள்ளது. இதனால் ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இந்த மருத்துவமனையில் பிணவறை இடிந்து விழும் நிலையில் உள்ளது. மருத்துவமனையில் பல கட்டிடங்கள் ஆங்காங்கே விரிசல் அடைந்து உள்ளது.

தேசிய தர சான்றிதழ் பெற்ற இந்த அரசு தலைமை மருத்துவமனையின்

அவலநிலையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News