உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி சவடு மண் விற்பனை; பொதுமக்கள் புகார்

Published On 2023-04-22 08:39 GMT   |   Update On 2023-04-22 08:39 GMT
  • அனுமதியின்றி சவடு மண் விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
  • தினமும் ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பெரிய கண்மாயில் 3 இடங்களில் ஒரே நபர் சவடு மண் எடுத்து 1 டிராக்டர் ரூ.600க்கு விற்பனை செய்து வருகிறார். அங்கு தினமும் ரூ.5 லட்சத்திற்கு சவடு மண் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

முதுகுளத்தூர் கண்மாயில் இருந்து அரசு அனுமதி இல்லாமல் சவடு மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஈடுபடும் நபருக்கு பல லட்சம் அபராதம் விதிக்கப்பட்டும் அதனை கட்டவில்லை. கடந்த 6 மாதத்திற்கு முன்பு முதுகுளத்தூர் கண்மாயில் விதிமுறையை மீறி ரூ.50 லட்சத்திற்கு சவடு மண் எடுத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.

முதுகுளத்தூர் பெரிய கண்மாயில் ஜே.சி.பி. மூலம் சவடு மண் எடுத்து தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். கடலாடி மலட்டாற்றில் மணல் ஆட்கள் மூலமே மண் எடுக்கப்பட்டு அரசு மணல் குவாரியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் முதுகுளத்தூர் பெரிய கண்மாயில் அனுமதியின்றி சவடு மண் எடுத்து தினமும் ரூ.5 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News