உள்ளூர் செய்திகள்
- பாய்மர படகுப்போட்டி நடந்தது.
- 24 பாய்மர பைபர் படகுகள் கலந்து கொண்டன.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், முள்ளிமுனையில் ஸ்ரீ பட பத்திர காளியம்மன், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 315-ம் ஆண்டு முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு கிராம தலைவர் கருப்பையா தலைமையில் துணை தலைவர் கணேசன், பஞ்சாயத்து தலைவர் அமிர்தவள்ளி மேகமலை ஆகியோர் முன்னிலையில் பாய்மர படகுப் போட்டி நடைபெற்றது.
இதில் கோட்டைப்பட்டிணம், தேவி பட்டிணம், தொண்டி, நம்புதாளை பகுதியிலிருந்து 24 பாய்மர பைபர் படகுகள் கலந்து கொண்டன.கடலோர காவல்படை சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமை யில் போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுட்டிருந்தனர்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகையும், சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.