உள்ளூர் செய்திகள்

பெரிய கண்மாய் மதகில் மீன் பிடித்த மகிழ்ச்சியில் தொழிலாளர்கள்

ராமநாதபுரம் பெரிய கண்மாய் மதகு பகுதியில் மீன்பிடிப்பு

Published On 2022-09-08 08:51 GMT   |   Update On 2022-09-08 08:51 GMT
  • ராமநாதபுரம் கண்மாய் மதகு நதியில் செங்கல் சூளை தொழிலாளர்கள், வேட்டி-சேலையை போட்டி போட்டு மீன்களை பிடித்து செல்கின்றனர்.
  • இதில் ஷட்டர் பகுதியில் ஏராளமான மீன்கள் துள்ளி குதிக்கின்றன.

ராமநாதபுரம்

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை நிரம்பியதால் அதன் உபரி நீருடன் மழை நீரும் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் வழியாக கார்குடியில் உள்ள பெரியகண்மாய் தலைமதகு வாய்க்காலில் 1000 கன அடி தண்ணீர் வருகிறது. அதிகளவு நீர்வரத்தால் பெரிய கண்மாய் நிரம்பி காவனுார், புல்லங்குடி வாய்க்கால்களுக்கு தலைமதகு பகுதியில் இருந்து தண்ணீர் செல்கிறது. இதில் ஷட்டர் பகுதியில் ஏராளமான மீன்கள் துள்ளி குதிக்கின்றன.

ராமநாதபுரம் அருகே கார்குடியில் பெரிய கண்மாய் தலைமதகு பகுதியில் வைகை ஆற்று நீரில் துள்ளி குதித்த மீன்களை அப்பகுதியை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளர்கள், பொதுமக்கள் வலை போட்டும், வேட்டி, சேலையை பயன்படுத்தியும் போட்டி போட்டு மீன்களை பிடித்து செல்கின்றனர்.

Tags:    

Similar News