உள்ளூர் செய்திகள்

மாநில செஸ் போட்டிக்கான தகுதி தேர்வு போட்டி

Published On 2022-11-07 07:40 GMT   |   Update On 2022-11-07 07:40 GMT
  • ராமநாதபுரத்தில் மாநில செஸ் போட்டிக்கான தகுதி தேர்வு போட்டி நடந்தது.
  • 17-வது செஸ் போட்டியை முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் நடத்தியது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பில் ராமநாதபுரம் ரோட்டரி சங்க கோரல் சிட்டி இணைந்து மாநில செஸ் போட்டிக்கான தகுதி தேர்வு போட்டியாக மாவட்ட அளவிலான 17-வது செஸ் போட்டியை முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் நடத்தியது.

மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் அப்பா மெடிக்கல் சுந்தரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தேவி உலகராஜ், முன்னிலை வகித்தார். செயலாளர்- உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம், ரோட்டரி சங்க கோரல் சிட்டி உதவி கவர்னர் செந்தில்குமார், தலைவர் சோமசுந்தரம், செயலாளர் ராஜேஷ், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

6 பிரிவுகளாக 5 சுற்றுகள் நடைபெற்ற இந்த போட்டிகளில் 58 பள்ளிகளில் இருந்து 415 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு சிறப்பு போட்டி நடந்தது. 5 பிரிவுகளிலும் முதல் 5 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகளும், கேடயமும் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். மாவட்ட செஸ் அசோசியேசன் செயலாளர் ரமேஷ், பொருளாளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.

Tags:    

Similar News