உள்ளூர் செய்திகள்

பாக்ஜல சந்தி கடலில் விடப்பட்ட இறால் குஞ்சுகள்

Published On 2023-09-08 13:35 IST   |   Update On 2023-09-08 13:35:00 IST
  • 7.50 கோடி பச்சை வரி இறால் குஞ்சுகள் பாக்ஜல சந்தி கடலில் விடப்பட்டன.
  • பச்சை வரி இறால் வளத்தை காக்க இந்நடவடிக்கை உதவியாக இருக்கும் என்றார்.

மண்டபம்

மன்னார் வளைகுடா, பாக்ஜல சந்தி கடல் பகுதியில் இறால் மீன்வளம் குறைந்து வருவதையடுத்து, பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு உதவும் வகையிலும், மீன்பிடியை மேம்படுத்தவும் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் இறால் குஞ்சுகளை பொரிப்ப கங்களில் வளர்த்து கடலில் விடும் திட்டம் கடந்த பல வருடங்களாக செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அங்கு வளர்த்த 68 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள் மீனவர்களுக்கு உதவும் வகையில் மண்டபம் கோவில்வாடி பாக்ஜல சந்தி கடல்பகுதியில் நேற்று மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவர் வினோத் தலைமையில் விடப்பட்டது. திட்ட தலைவர் தமிழ்மணி, விஞ்ஞானி ஜான்சன் உட்பட மீன் துறை அதிகாரிகள் மற்றும் மீனவ அமைப்பினர் பங்கேற்றனர்.

இதுகுறித்து மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைவர் வினோத் கூறுகையில், இத்திட்டம் தொடங்கிய பிப்.2022-ல் இருந்து இதுவரை 7.50 கோடி பச்சை வரி இறால் குஞ்சுகள் பொரிப் பகங்களில் வளர்க்கப்பட்டு மன்னார் வளைகுடா, பாக்ஜல சந்தி கடற்பகுதியில் விடப்பட்டுள்ளன. பச்சை வரி இறால் வளத்தை காக்க இந்நடவடிக்கை உதவியாக இருக்கும் என்றார்.

Tags:    

Similar News