உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரம் நகரில் 10 மணி நேரம் மின்தடை

Published On 2022-12-14 08:15 GMT   |   Update On 2022-12-14 08:15 GMT
  • ராமநாதபுரம் நகரில் 10 மணி நேரம் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
  • ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர்கள் பழுது காரணமாக இந்த மின்தடை ஏற்படுகிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் உள்ள மின்வாரிய டிரான்ஸ் பார்மர்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் லேசான காற்று, மழை பெய்தாலும் அடிக்கடி மின்தடை ஏற்படுவது வழக்கமாக உள்ளது.

இதுகுறித்து புகார் அளித்தால் மின்வாரிய ஊழியர்கள் அந்த நேரத்தில் சரிசெய்கின்றனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது இல்லை என்று மக்கள் புகார் தெரி விக்கின்றனர்.

நேற்று முன்தினம் ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளுக்கு மின்வினியோகம் வழங்கும் ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் 3 டிரான்ஸ்பார்மர்கள் பழுதாகியது. இதனால் காலை 6 மணி முதல் மின்தடை ஏற்பட்டது. தற்காலிக தீர்வாக பட்டணம்காத்தான், ராமநாதபுரம் உப மின் நிலையங்களில் இருந்து ஒவ்வொரு பகுதியாக சிறிது நேரம் முறை வைத்து மின்வினியோகம் வழங்கினர்.

ராமநாதபுரத்தில் அடிக்கடி 10 மணி நேரத்திற்கும் மேல் மின் தடை ஏற்படுவதால் தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள், வணிக நிறுவனத்தினர், பொதுமக்கள் அன்றாட பணிகள் மேற்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.

Tags:    

Similar News