உள்ளூர் செய்திகள்

சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அச்சம்

Published On 2023-06-04 08:10 GMT   |   Update On 2023-06-04 08:10 GMT
  • அபிராமத்தில் சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
  • கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

அபிராமம்

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் பார்த்தி பனூர், கமுதி வழியாக சாயல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

இந்த சாலையில் உள்ள அச்சங்குளம், அகத்தாரிருப்பு, நத்தம், கமுதி, பசும்பொன் அபிராமம் உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டில் அதிக அளவில் ஆடு, மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்ததுக்கள் ஏற்படுகிறது. சாலையின் குறுக்கே மாடுகள் அமர்ந்து விடுவதாலும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் 85 கி.மீ வேகத்திற்கும் மேலாக செல்லும் நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் கால்நடைகள் திடீரென ரோட்டின் குறுக்கே செல்வ தால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. சில நேரங்களில் உயிர் சேதமும் பொருட் சேதமும் ஏற்படுகின்றன.

எனவே முக்கிய சாலையான இப்பகுதியில் கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News