உள்ளூர் செய்திகள்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் குடும்பத்தினருக்கு காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. நிதியுதவி வழங்கியபோது எடுத்தபடம்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ. நிதியுதவி

Published On 2023-11-08 06:54 GMT   |   Update On 2023-11-08 06:54 GMT
  • இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ. நிதியுதவி வழங்கப்பட்டது.
  • காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் கலந்து கொண்டு அனைவருக்கும் ஜூஸ் வழங்கி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.

ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது 10 விசைப்படகுகள் மற்றும் 64 மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து மீன வர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தங்கச்சி மடத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்க கூட்டமைப்பு சார்பில் இரண்டு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் இறுதியில் ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு அனைவருக்கும் ஜூஸ் வழங்கி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.

இதனைதொடர்ந்து, அவ ரது சொந்த நிதியில் இருந்து இலங்கை சிறையில் உள்ள 64 மீனவர்களின் குடும்பத்தினரின் செலவுக்காக தலா 5 ஆயிரம் 54 பேருக்கும் வீதம் 3.20 லட்சம் ரொக்க பணம் வழங்கினார்.

Tags:    

Similar News