உள்ளூர் செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம்: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கண்டனம்

Published On 2023-06-14 07:55 GMT   |   Update On 2023-06-14 07:55 GMT
  • அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.
  • இத்தகையை நடவடிக்கைகள் மூலம் பா.ஜனதாவின் கனவு நனவாகாது என்றார்.

ராமநாதபுரம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறியதாவது:-

அரசியல் எதிரிகள் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகளை ஏவி விடுவது ஒன்றிய பா.ஜனதா அரசின் வழக்கமாக இருந்து வருகிறது. அரசியல் சட்டத்தையும் மாநில உரிமைகளையும் மத்திய அரசு காலில்போட்டு மிதித்து வருகிறது. அதன் ஓர் அங்கமாக அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் உள்ளது. இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். இது அமலாக்கத்துறையின் அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். ஒன்றிய அரசின் அராஜகத்தின் மற்றொரு வெளிப்பாடாகவே இச்செயல் அமைந்துள்ளது. தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்ட சோதனையும் எதேச்சதிகாரத்தின் உச்சமாக உள்ளது. இத்தகையை நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தில் வலிமையடையலாம் என்ற பா.ஜனதாவின் கனவு நனவாகாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News