உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேக விழா

Published On 2022-10-21 08:25 GMT   |   Update On 2022-10-21 08:25 GMT
  • பசும்பொன் தேவர் நினைவிடத்தில் கும்பாபிஷேக விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது.
  • 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குருபூஜையுடன் கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.

கமுதி

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராம லிங்கத் தேவர் நினைவாலயம் அமைந்துள்ளது. இங்கு தினமும் பூஜைகள், மாதம் தோறும் பவுர்ணமி பூஜைகள்‌, திருவிளக்கு பூஜை, அன்னதானம் நடைபெற்று வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தேவர் நினைவாலய வளாகத்தில் விநாயகர், சுப்ரமணியர் கோவில் கட்டி சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தேவர் நினைவாலயத்தில்2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 22 ஆண்டு களுக்கு பிறகு தற்போது குருபூஜையுடன் கும்பாபிஷே கமும் நடைபெற உள்ளது.

வருகிற 30-ந்தேதி தேவரின் 115-வது ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் 28-ந்தேதி ஆன்மீக விழாவும், 29-ந்தேதி அரசியல் விழாவும், 30-ந்தேதி குருபூஜை விழாவும் நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டில் வருகிற 28-ந் தேதி தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் விநாயகர், சுப்ரமணியர் கோவில், முத்துராமலிங்க தேவர் நினைவாலயத்தில் கும்பாபிஷேகம் நடை பெறும். இதையொட்டி 27-ந் தேதி காலை 9 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.

அன்று மாலை 6 மணிக்கு முதலாம் காலை யாக பூஜையும், 28-ந் தேதி காலை 7 மணிக்கு 2-ம் கால யாகபூஜையும், காலை 9 மணிக்கு தீபாரனையும் நடைபெற உள்ளன.

இதுகுறித்து தேவர் நினைவாலைய பொறுப்பா ளர் காந்திமீனாள் நடராஜன் கூறுகையில், தேவர் நினைவிடத்தில் 22 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் குழுவின ரால் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட உள்ளது என்றார்.

Tags:    

Similar News