உள்ளூர் செய்திகள்

கபடி அணி வீரர்களுக்கு பாராட்டு

Published On 2022-09-28 08:01 GMT   |   Update On 2022-09-28 08:01 GMT
  • ராமநாதபுரம் மாவட்ட கபடி அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
  • மாநில அளவிலான ஆண்களுக்கான 48-வது ஜூனியர் கபடி போட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்தது.

ராமநாதபுரம்

மாநில அளவிலான ஆண்களுக்கான 48-வது ஜூனியர் கபடி போட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 32 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்ட அணி 3-ம் பரிசை வென்றது. இந்த அணி வீரர்களுக்கு பாராட்டு விழா கராத்தே பழனிச்சாமி தலைமையில் நடந்தது.

மருதம் விளையாட்டு குழு தலைவர் ஜெயகணேஷ், அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். கபடி அணி வீரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் ரொக்கம், பாராட்டு சான்றிதழ், பதக்கம், கேடயம் மற்றும் கபடி விளையாட்டு உபகரணங்கள், 5 லட்சம் மதிப்பில் காப்பீடு செய்யப்பட ஆவணம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை சாண்டா ஸ்போர்ட்ஸ் கிளப் அருண்குமார், பெரியார் நகர் பசுபதி ஆகியோர் செய்திருந்தனர். தேசிய கபடி நடுவர் குழந்தை, தேசிய கபடி வீரர்கள் மனோஜ், செல்வின், வேல் அழகன், துரை.ராமநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தேசிய அளவில் நடைபெற உள்ள கபடி போட்டியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வீரர்களை அனுப்புவதற்காக சிறப்பு பயிற்சி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News