உள்ளூர் செய்திகள்

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயற்குழு கூட்டம்

Published On 2022-12-31 12:58 IST   |   Update On 2022-12-31 12:58:00 IST
  • இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயற்குழு கூட்டம் நடந்தது.
  • கூட்ட ஏற்பாடுகளை செய்தனர். ஜீவா நன்றி கூறினார்.

ராமநாதபுரம்

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் ராமநாதபுரம் மாவட்ட கிளை செ யற்குழு கூட்டம் சேர்மன் சுந்தரம் தலைமையில் நடந்தது. புரவலர்கள் ராமநாதன், உலகராஜ், துணை சேர்மன் ஜெயக்குமார், ராமேசுவரம் கிளை சேர்மன் பாலசுப்ரமணியன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஷாலினி பில்லி கிரஹாம், செய்யது முகமது ஹசன், கோபால், ரினி, பவதாரணி, கார்த்திக் முன்னிலை வகித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட கல்லூரிகளில் யூத் ரெட் கிராஸ் செயல்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் வள்ளி விநாயகம், மாவட்ட கன்வீனர்கள் அலெக்ஸ், பாலமுருகன், முதலுதவி பயிற்சிகள்-பேரிடர் கால பயிற்சிகள் குறித்து சொக்கநாதன், ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்த்து கலெக்டரிடம் ஒப்படைத்தல் குறித்து பசுமை ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் மலைக்கண்ணன், மாவட்ட செயலர் ரமேஷ் ஆகியோர் பேசினார்.

வரவு செலவு கணக்குகளை மாவட்ட பொருளாளர் குணசேகரன் சமர்ப்பித்தார். புதிய உறுப்பினர் சேர்ப்பு குறித்து பேசப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு முதலுதவி, பேரிடர் காலங்களில் ஏற்படும் சூழ்நிலைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்ட ஆலோசகர் காளீஸ்வரன் உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், புரவலர்கள் ஆலோசனைகளை வழங்கினர். திரவிய சிங்கம், தமிழரசன், ஜெயக்குமார், முருகேசன் ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளை செய்தனர். ஜீவா நன்றி கூறினார்.

Tags:    

Similar News