உள்ளூர் செய்திகள்
பரமக்குடி அரசு மருத்துவமனையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
- பரமக்குடியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
- சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் தேசிய கொடி யேற்றினார்.
பரமக்குடி
பரமக்குடியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் தேசிய கொடி யேற்றினார்.
வட்டாட்சியர் அலுவ லகத்தில் ரவி, அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரி முத்தரசன், நகராட்சியில் நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி ஆகியோர் கொடி ஏற்றினார். நயினார்கோவில் ஒன்றிய தலைவர் வினிதா, போகலூர் ஒன்றிய தலைவர் சத்யாகுண சேக ரன், பரமக்குடி ஒன்றிய தலைவர் சிந்தாமணி முத்தையா ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.