ராமநாதபுரத்தில் “நடப்போம் நலம் பெறுவோம்” திட்ட நிகழ்ச்சியை கலெக்டர் விஷ்ணு சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.உடன் எஸ்.பி தங்கதுரை,மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் ஆகியோர் உள்ளனர்.
நடப்போம் நலம் பெறுவோம் திட்ட தொடக்க விழா
- மதுரையில் நடப்போம் நலம் பெறுவோம் திட்ட தொடக்க விழா நடந்தது.
- அனைத்து பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் நடை பயிற்சியில் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்புடன் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை நடத்தும் சுகாதார நடை பயிற்சி நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் தொடக்க விழா நடந்தது.
மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கேணிக்கரை காவல் நிலையத்தில் தொடங்கி, ஆஷி பன்னோக்கு மருத்து வமனை, அம்மா பூங்கா, வேலுமாணிக்கம் ஹாக்கி மைதானம், புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக பி ன்புறம், போலீஸ் சூப்பி ரண்டு முகாம், மகாத்மா காந்தி நகர், கிழக்கு கடற்கரை சாலை (Ajfan Dates), புதிய சோதனை சாவடி, காவல் கண்கா ணிப்பாளர் முகாம், அரசு விருந்தினர் மாளிகை வழியாக கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷன் வரை மொத்தம் 8 கி.மீ நடை பயணம் மேற்கொள்ள ப்பட்டது.அனைத்து பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் நடை பயிற்சியில் கலந்து கொண்டனர். மேலும் நடை பயிற்சி மேற்கொள்பவர்கள் வசதிக்காக குடிநீர், ஓய்வு நாற்காலிகள் மற்றும் வழிகாட்டி பலகைகள், நடைபயிற்சி நன்மைகள் குறித்த பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.
இத்திட்டத்தினை இன்று காலை சனிக்கிழமை ராம நாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை,மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜீலு,சார் கலெக்டர் அப்தாப் ரசூல்,சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் அர்ஜுன் குமார் (ராமநா தபுரம்), இந்திரா (பர மக்குடி),செய்தி மக்கள் தொடர்பு அலு வலர்பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) விஜயகுமார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் தினேஷ்கு மார்,மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ராமநாதபுரம் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம், வாலாந்த ரவை ஊராட்சி மன்றத் தலைவர் முத்தமிழ் செல்வி பூரணவேல்,உட்பட உள்ளாட்சி பிரதிநி திகள், அரசு அலுவ லர்கள் பங்கேற்றனர்.