உள்ளூர் செய்திகள்

இணையதள விளம்பரத்தை நம்பி ரூ.1.21 லட்சத்தை இழந்த பட்டதாரி பெண்

Published On 2022-08-04 08:28 GMT   |   Update On 2022-08-04 08:28 GMT
  • இணையதள விளம்பரத்தை நம்பி பட்டதாரி பெண் ரூ.1.21 லட்சத்தை இழந்தார்.
  • இன்ஸ்டாகிராமில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி நடந்துள்ளது.

ராமநாதபுரம்

ராமேசுவரம் சல்லிமலை தெருவைச் சோ்ந்தவர் முனியசாமி. இவரது மகள் சரண்யா (வயது27). இவா் பி.சி.ஏ. பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறாா்.

இந்நிலையில் இவரது இன்ஸ்டாகிராமிற்கு கடந்த ஜூலை 26-ந் தேதி, இணையதளம் மூலம் பகுதி நேர வேலையில் சேர்ந்தால் வீட்டில் இருந்தபடியே ரூ.50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்ற விளம்பரம் வந்துள்ளது. இதை படித்தவர் அதில் இருந்த லிங்கை கிளிக்கை செய்த போது சரண்யாவின் செல்ேபானுக்கு ஏஞ்சலா என்ற பெயரில் குறுஞ்செய்தி வந்தது.

அதில் வேலைக்கு சேர நுழைவுக்கட்டணமாக பணம் செலுத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பிய சரண்யா குறிப்பிட்ட வங்கி கணக்கில் பல்வேறு தவணைகளில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 904 வரை செலுத்தியுள்ளாா்.

அதன் பிறகு சரண்யாவின் இணையதள கணக்கில் ரூ.1.86 லட்சம் இருப்பு இருப்பதாக காட்டியுள்ளது. இதனை நம்பி அந்தப் பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை.

வேலைக்கு சேர நினைப்பவர்களை ஏமாற்றும் நோக்கத்தில் அந்த இருப்பு கணக்கை மோசடி நபர்கள் காட்டியுள்ளனர். இதனால் தான் ஏமாற்றதப்பட்டதை உணர்ந்த சரண்யா ராமநாதபுரம் சைபா் கிரைம் போலீசில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பொன்தேவி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

Tags:    

Similar News