உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்கம்

Published On 2023-08-26 14:36 IST   |   Update On 2023-08-26 14:36:00 IST
  • முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
  • கீழத்தூவல் ஊராட்சி மன்ற தலைவர் சாத்தாயி திருநாவுக்கரசு அனை வரையும் வரவேற்றார்.

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் தாலுகா கீழத்தூவல் ஊராட்சி, மேலத்தூவல் கிராமத்தில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவியர்க்கு காலை உணவு திட்டத்தை தாசில்தார் சடையாண்டி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய தலைவர் சண்முகபிரியா ராஜேஸ், ஆனையாளர் ஜானகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழத்தூவல் ஊராட்சி மன்ற தலைவர் சாத்தாயி திருநாவுக்கரசு அனை வரையும் வரவேற்றார். பள்ளி மாணவ, மாணவி களுக்கு காலை உணவு இனிப்புடன் வழங்கப்பட்டன. காலை உணவு தொடக்க விழாவில் ஒன்றிய கவுன்சிலர் லெட்சுமி முத்துராமலிங்கம் வட்டார கல்வி அலுவலர் இந்திராகாந்தி மேலத்தூவல் தொடக் கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கென்னடி, கீழத்தூவல் ஊராட்சி செயலர் முனியசாமி உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Similar News