உள்ளூர் செய்திகள்

இரவு நேரத்தில் மின்விளக்குகள் சரியாக எரியாததால் பாலத்தில் போதுமான வெளிச்சம் இல்லாததை படத்தில் காணலாம்.

பாம்பன் பாலத்தில் பழுதான மின்விளக்குகள்

Published On 2023-09-22 07:14 GMT   |   Update On 2023-09-22 07:14 GMT
  • பாம்பன் பாலத்தில் பழுதான மின்விளக்குகளை மாற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
  • இதனால் பாம்பன் பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

ராமேசுவரம்

பாம்பன் கடலில் 100 அடி உயரத்தில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் பாலம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த பாலம் வழியாக அரசு வாகனங்கள், லாரிகள், சுற்றுலா பஸ், கார், வேன், உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் என நாள் தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் ராமேசுவரத்திற்கு சென்று வருகின்றன.

ராமேசுவரம் புன்னிய தலமாக உள்ளதால் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இதனால் இரவு நேரங்களிலும் பாம்பன் பாலத்திலும் போக்குவரத்து அதிகமாக உள்ளது. பலரும் பாலத்தில் இறங்கி நின்று கடலை ரசிக்கின்றனர். மேலும் புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பாலத்தில் ரூ. பல கோடி மதிப்பிட்டில் புனர மைப்பு பணிகள் நடை பெற்று வருகிறது. நீண்ட தொலைவில் வரும் போதே பாலத்தில் அழகை சிறப்பாக காணும் வகையில் 350-க்கும் மேற்பட்ட எல்.இ.டி மின் விளக்குகள் பொருத்தப் பட்டுள்ளது.இதற்கு பல லட்சம் செலவிடப்பட்டுள் ளது.

ஆனால் பல விளக்கு கள் சரிவர எரியாமல் உள்ளது. குறிப்பாக பாலம் ஏறும் மற்றும் இறங்கும் இடங்களில் உள்ள 100 க்கும் மேற்பட்ட விளக்குகள் முழுமையாக சரியாக எரியாமல் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனால் பாம்பன் பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் பக்தர்கள், பயணிகள், வாகன ஓட்டிகளின் நலனை கருதி பாம்பன் பாலத்தில் இரவு நேரங்களில் அனைத்து விளக்குகளும் எரியும் வகையில், பழுதடைந்த மற்றும் சரிவர எரியாத விளக்குகளை சீரமைத்து மாற்றியும் தர வேண்டும் என்றும், இரவு நேரத்தில் பாலத்தின் அனைத்து பகுதிகளிலும் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொது மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News