உள்ளூர் செய்திகள்

காட்டு கருவேல மரங்களை அகற்றி மிளகாய் பயிரிட விவசாயிகள் ஆர்வம்

Published On 2023-07-18 07:00 GMT   |   Update On 2023-07-18 07:00 GMT
  • காட்டு கருவேல மரங்களை அகற்றி மிளகாய் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
  • விவசாயி களுக்கு மானியம் வழங்கப் படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்தான் நாங்கள் மிளகாய் பயிர் செய்து வருகிறோம் என்றார்.

அபிராமம்

ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சி, வானம் பார்த்த பூமி. காட்டு கருவேல மரங்கள் நிறைந்த பகுதி என்ற நிலை, இன்றளவும் இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் கமுதி வட்டம்.அபிராமம் பகுதியில் காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு மிளகாய் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

கடந்த ஆண்டு போதிய மழை இல்லததால் நெல் விவசாயிகள் விரக்தியடைந் தனர். இந்த நிலையில் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் மிளகாய் பயிர் செயய்பவர்களுக்கு அதிலும் குறிப்பாக காட்டு கருவேல மரங்களை அகற்றி மிளகாய் பயிர்செய்யும் விவசாயி களுக்கு மானியம் வழங்கப் படும் என்று அறிவிக்கப் பட்டது.

இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அபிராமம் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட் கிரா மத்தை சேர்ந்த விவசாயிகள் காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு மிளகாய் விவசாயத்தில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள விவசாயி கூறுகையில், அபிராமம் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாகும். முழுக்க முழுக்க வானம் பார்த்த பூமியாக இருப்பதால் விவசாய நிலங்களில் காட்டு கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது . கடந்த சில நாட்களுக்கு முன் வேளாண்மை தோட்ட கலைத்துறை மூலம் கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு மானியம் வழங்கப் படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்தான் நாங்கள் மிளகாய் பயிர் செய்து வருகிறோம் என்றார்.

Tags:    

Similar News