உள்ளூர் செய்திகள்

தி.மு.க. வார்டு செயலாளர் மருதுபாண்டி தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. 

தி.மு.க. தலைவர்களை அவதூறு பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2023-08-24 13:34 IST   |   Update On 2023-08-24 13:34:00 IST
  • அ.தி.மு.க. மாநாட்டில் தி.மு.க. தலைவர்களை அவதூறு பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மதுரை வளையங் குளத்தில் கடந்த 20-ந்தேதி அ.தி.மு.க. மாநாடு நடந்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் வடக்கு நகர 20-வது வார்டு செயலாளராகவும், ராமநாதபுரம் வடக்கு நகர பொறியாளர் அணி அமைப்பாளருமான பொறி யாளர் கா.மருதுபாண்டி போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

மதுரை வளையங் குளத்தில் கடந்த 20-ந்தேதி அ.தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பாட்டு பாடிய ஒருவர் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து அவதூறாகவும், அநாகரீக மான முறையிலும் பாட்டு பாடினார். மேலும் தி.மு.க. தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துகள் பேசப்பட்டது.

இதனால் தி.மு.க.வினர் அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்த னர்.

எனவே அ.தி.மு.க. மாநாட்டில் தி.மு.க. தலைவர்களை அவதூறாக பேசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடுமையான சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News