உள்ளூர் செய்திகள்

ஐக்கிய ஜமாத் சார்பில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஐக்கிய ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2023-11-08 12:35 IST   |   Update On 2023-11-08 12:35:00 IST
  • பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஐக்கிய ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் சந்தைத்திடல் முன்பு ராமநாதபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் பாலஸ்தீன அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய முஸ்லிம் ஜமாத் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளருமான ஷாஜ ஹான் தலைமை வகித்தார்.மாவட்ட பொதுச் செய லாளர்ஆலம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் தொகுதி எம்.பி.நவாஸ்கனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மண்டபம் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் லுத்துபுல்லா, ராமநாதபுரம் பாசிப்பட்டறைத்தெரு முஸ்லிம் ஜமாத் மேனேஜிங் டிரஸ்டி அசரப்அலி, டிரஸ்டி ஜபருல்லாஹ்கான், கீழக்கரை டவுன் ஹாஜி காதர்பக்ஸ், மாவட்ட உலமா சபை தலைவர் முஹம்மது இபுராஹிம், செயலாளர் ஜலால், ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News