உள்ளூர் செய்திகள்

விதை உற்பத்தி குறித்த பயிற்சி உதவி இயக்குநர் சிவகாமி தலைமையில் நடந்தது.

தானியங்களின் சாகுபடி பெருமளவு குறைந்தது

Published On 2023-01-02 07:08 GMT   |   Update On 2023-01-02 07:08 GMT
  • கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களின் சாகுபடி பெருமளவு குறைந்ததாக வேளாண் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
  • இதற்கான ஏற்பாடுகளை உதவி விதை அலுவலர் சரவணன் செய்திருந்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத் துறை மற்றும் கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இணைந்து சிறு தானியங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி குறித்த பயிற்சி கீழராமநதி ஊராட்சி மன்ற அலுவலர் கட்டிட மையத்தில் நடந்தது.

இதில் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி பேசுகையில், பாரம்பரிய தானியங்களான கேழ்வரகு, வரகு, பனிவரகு, சாமை, தினை ஆகியவற்றின் சிறப்புகள் பற்றி கூறினார். முன்பு தமிழகத்தில் பரவலாக உற்பத்தி செய்யப்பட்டு உணவாக பயன்படுத்தப்பட்ட இந்த தானியங்கள் கடந்த 20 வருடங்களாக பெருமளவு குறைந்து சில பகுதிகளில் மட்டும் சாகுபடி செய்யப்படும் பயிர்களாக மாறிவிட்டது.

அதன் சிறப்பு பண்புகளை உணர்ந்து அதிக அளவில் பயிரிடவும் விதைப்பண்ணை அமைக்கவும் வலியுறுத்தினார். சிறு தானியங்களை மதிப்பு கூட்டிய உணவாக மாற்றி உணவில் சேர்த்து ஆரோக்கியத்தைப் பேணி காக்கவும் அறிவுறுத்தினார்.

விதைச்சான்று அலுவலர் சீராளன், அதிக அளவு ராகி விதைப்பண்ணை அமைத்து லாபம் பெறும் வழிமுறைகள் மற்றும் விதைச்சான்று நடைமுறைகள் பற்றி எடுத்துரைத்தார். வேளாண்மை அலுவலர் வீரபாண்டி, அங்கக வேளாண்மை குறித்து விளக்கினார்.

கமுதி வேளாண்மை உதவி இயக்குநர் சிவராணி, வேளாண் திட்டங்கள் குறித்து விளக்கினார். நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் மூத்த வேளாண்மை அலு வலர் மண்மாதிரி எடுப்ப தன் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்து விவசாயி களிடம் இருந்து மண் மாதிரி மற்றும் தண்ணீர் மாதிரிகளை பெற்றுக் கொண்டார்.

இதற்கான ஏற்பாடுகளை உதவி விதை அலுவலர் சரவணன் செய்திருந்தார். 

Tags:    

Similar News