உள்ளூர் செய்திகள்

கிராம இளைஞர்களுக்கு சமூக சேவை குறித்த பயிற்சி

Published On 2023-05-05 08:32 GMT   |   Update On 2023-05-05 08:32 GMT
  • கிராம இளைஞர்களுக்கு சமூக சேவை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
  • மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலகத்தை அணுகலாம்.

ராமநாதபுரம்

ராமநாதபும் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்ட அளவில் ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மையத்தின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு கிராம தன்னார்வத்தொண்டு மற்றும் சமூக சேவை குறித்து 3 மாத சான்றிதழ் 150 பேருக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் படிப்பானது 6 நாட்கள் நேரடி வகுப்புகளாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் சிறந்த வல்லுநர்களால் நடத்தப்படும். மேலும் கிராம அளவில் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், வட்டார அலுலவகங்கள், அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவை பற்றி கள ஆய்வு மேற்கொண்டு (Field Assisgnments) சமர்ப்பிக்க வேண்டும். ஊராட்சிகளுக்கான மாவட்ட வன மையத்தின் மூலம் பயிற்சி வகுப்புகளுக்கிடையே உதவி இயக்குநரால் கள மையத்துக்கு அழைத்து செல்லப்படும். சான்றிதழ் படிப்பிற்கான பாடபுத்தகம், உபகரணங்கள் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். சான்றிதழ் படிப்பின் இறுதியில் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த 3 மாத சான்றிதழ் படிப்பில் மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி செயலர்கள், களப்பணியாளர்கள், கிராம இளைஞர் தன்னார்வலர்கள் மற்றும் சுய உதவிக்குழு 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 18 முதல் 45 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். இதில் சேர பயிற்சி கட்டணமாக ரூ.1000 இணைய வழி வாயிலாக ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலரைத் தொடர்பு கொண்டு செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News