உள்ளூர் செய்திகள்

விளையாட்டு போட்டி நிறைவு விழா

Published On 2022-09-10 07:47 GMT   |   Update On 2022-09-10 07:47 GMT
  • கீழக்கரை குறுவட்டார விளையாட்டு போட்டி நிறைவு விழா நடந்தது.
  • தொழிலதிபர் டத்தோ முகமது யூசுப் சார்பில் நினைவு பரிசுகளை தொழிலதிபர் பீர் முகம்மது வழங்கினார்.

கீழக்கரை

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கீழக்கரை குறுவட்டார அளவிலான தடகளம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் 10 நாட்களாக தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதன் நிறைவு விழா முஸ்லிம் ஜமாத் இஸ்லாமிய இளைஞர் மன்றம் சார்பில் நடந்தது. ஜமாஅத் தலைவர் அப்துல் ஹமீது கான் தலைமை தாங்கினார். செயலாளர் முஹம்மது ரபீக், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் டேவிட் மோசஸ் முன்னிலை வகித்தனர். கமால் பாட்சா நினைவாக மலேசியா டி.எம்.ஒய்.கம்பெனி நிறுவனர் தொழிலதிபர் டத்தோ முகமது யூசுப் சார்பில் நினைவு பரிசுகளை தொழிலதிபர் பீர் முகம்மது வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் புல்லாணி பேசுகையில், நடப்பு கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றால் தலா ஒரு பவுன் தங்கம் பரிசளிப்பதாக தெரிவித்தார். மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கருப்பையா, தினைக்குளம் ஊராட்சி தலைவர் சிகப்பியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமையாசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார்.

பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ஜாகிர் உசேன், ஜமாஅத் துணைத் தலைவர் முகம்மது அலி ஜின்னா, ஆர்.எம்.எஸ்.ஏ. தலைவர் பால்ராஜ், எஸ்.எம்.சி. தலைவர் கப்சா பேகம், பள்ளி புரவலர் பாக்கர் அலி, பிச்சைமணி, களிமண்குண்டு தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியைகள் தீபசாந்தினி, எஸ்தர் ஷீபா மெர்லின் நன்றி கூறினர். நிகழ்ச்சியை ஜமாத் செயலாளர் முகம்மது ரபீக், முதுகலை ஆசிரியர்கள் மணிவண்ணன், மணிமொழி, பட்டதாரி ஆசிரியை விஜயலட்சுமி, ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Tags:    

Similar News