உள்ளூர் செய்திகள்

நரிக்குறவர்களுக்கு சாதி சான்றிதழ்

Published On 2023-06-16 13:48 IST   |   Update On 2023-06-16 13:48:00 IST
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் நரிக்குறவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
  • நரிக்குறவர் இன மக்களின் சார்பாக உதவி ஆட்சியருக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா, நாராயணபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஜாதி பிரிவில் இருந்து வருகின்றனர். கல்வி மற்றும் அரசு உதவிகளை பெறுவதற்காக பழங்குடியினர் (எஸ்.டி) பிரிவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக கமுதி நாராயணபுரத்தை சேர்த்த 61 பேருக்கு சாதி சான்றிதழ்களை பரமக்குடி உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல் வழங்கினார்.

அப்போது நரிக்குறவர் இன மக்களின் சார்பாக உதவி ஆட்சியருக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கமுதி வட்டாட்சியர் சேதுராமன், உதவி ஆட்சியர் நேர்முக உதவியாளர் வரதன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Similar News