நேரு யுவகேந்திரா சார்பில் முத்தமிழ் அறக்கட்டளைக்கு பொது சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
நேரு யுவகேந்திரா சார்பில் முத்தமிழ் அறக்கட்டளைக்கு விருது
- நேரு யுவகேந்திரா சார்பில் முத்தமிழ் அறக்கட்டளைக்கு விருது வழங்கப்பட்டது.
- மகளிர்க்கு இலவச தையல் பயிற்சி போன்ற சேவைகளை செய்து வருகிறது.
முதுகுளத்தூர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு அமைச்ச கத்தின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திரா சார்பில் பொது சேவைக்கான விருது வழங்கும் விழா நடந்தது.இதற்கான அறிவிப்பு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இதன் படி பல்வேறு மன்றங்கள் அறக்கட்ட ளைகள் நற்பணிமன்றங்கள் தாங்கள் செய்த சேவைகளை சமர்ப்பித்தனர். இதில் இருந்து 5 மன்றங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த 5 மன்றங்களுக்கும் ராமநாத புரம் மாவட்ட துணை கலெக்டர் முன்னிலையில் நேர்காணல் நடந்தது.
இறுதியாக முதுகுளத்தூர் தாலுகாவில் செயல்படும் முத்தமிழ் அறக்கட்டளை விருதுக்கு தேர்வு செய்யப் பட்டது. இதற்கான விழா வில் தர்மர் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முத்தமிழ் அறக் கட்டளை நிறுவனர் சபரி மலைநாதனிடம்விருதை வழங்கினார்.
முத்தமிழ் அறக்கட்டளை யானது வேலைவாய்ப்பு முகாம், விதவைகளுக்கு மளிகை சாமான் வழங்கல், ஊனமுற்றோருக்கு நிதி உதவி, முக கவசம் வழங்கல், மரக்கன்று வழங்கல், விளையாட்டு போட்டிகள் நடத்துதல், ஆதரவற்றோ ருக்கு உணவு வழங்கல், மகளிர்க்கு இலவச தையல் பயிற்சி போன்ற சேவைகளை செய்து வருகிறது.