உள்ளூர் செய்திகள்

தேவாலய சீரமைப்பு நிதிக்கு விண்ணப்பிக்கலாம்

Published On 2022-07-20 13:44 IST   |   Update On 2022-07-20 13:44:00 IST
  • தேவாலய சீரமைப்பு நிதிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
  • கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்தக் கட்டடங்களில் செயல்படும் தேவாலயம் சீரமைக்க அரசு சாா்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் செயல்பட்டு வரும் தேவாலயங்களை பழுது பாா்த்தல், சீரமைத்தல் பணிகளுக்கு நிதியுதவித் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்தக் கட்டடங்களில் செயல்படும் தேவாலயம் சீரமைக்க அரசு சாா்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும். தேவாலயம் 15 முதல் 20 ஆண்டுகள் வரை இருப்பின் ரூ.2 லட்சமும், தேவாலயம் 20 ஆண்டுக்கும் அதிகமாக இருப்பின் அதற்கு ரூ.3 லட்சமும் நிதியுதவி அளிக்கப்படும்.

சீரமைப்புக்கான நிதி கோரும் விண்ணப்பப் படிவம் மற்றும் சான்றிதழ் www.bcmbcmw@tn.gov.in இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. அதைப் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் அளிக்க வேண்டும். விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் கலெக்டர் தலைமையிலான குழு பரிசீலித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதனடிப்படையில் நிதியுதவிக்கு பரிந்துரைக்கப்படும்.

நிதியுதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னனு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News