உள்ளூர் செய்திகள்

பருவ மழையை முன்னிட்டு விவசாய பணிகள் தீவிரம்

Published On 2022-10-11 08:05 GMT   |   Update On 2022-10-11 08:05 GMT
  • பருவ மழையை முன்னிட்டு திருவாடானை பகுதியில் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளது.
  • 42 ஆயிரத்து 500 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளான திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய பகுதிகளில் ஏராளமானோர் விவசாய பணிகளை செய்து வருகின்றனர். தற்போது ஐப்பசி மாதம் வருவதையொட்டி பருவமழை பெய்யும் என எதிர்பார்த்து அந்தப்பகுதியில் விவசாய ப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள 42 ஆயிரத்து 500 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திருவாடானை பகுதியில் 26 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு விவசாயப்பணிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து விவசாயி கடுக்களுர் துரைப்பாண்டி கூறுகையில், பொதுவாக ஆடியில் விதை விதைப்பார்கள்.

இந்தப்பகுதி வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், பருவ மாற்றம் காரணமாகவும் ஆவணி, புரட்டாசி மாதங்களில் விதைக்கிறார்கள். தற்போது பெய்த மழையில் சில இடங்களில் பயிர் முளைத்துள்ளது. களைக்கொல்லி தெளிக்க ப்பட்டும், ஸ்பிரே செய்யப்பட்டும் வருகிறது. அடுத்த மழைப்பொழிவை எதிர்பார்த்து உரம் போடப்பட்டு வருகிறது. இந்த வருடம் பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் விவசாயப்பணிகளை தொடங்கியுள்ளோம் என்றார்.

Tags:    

Similar News