உள்ளூர் செய்திகள்

ஆதாரை இணைக்க கூடுதல் கட்டணம் வசூல்

Published On 2022-11-30 08:08 GMT   |   Update On 2022-11-30 08:08 GMT
  • அபிராமம் பகுதியில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
  • தனிநபர்கள் ஒரு மின் இணைப்பு எண்ணுக்கு ஆதாரை இணைக்க ரூ.50, ரூ.100, ரூ.150 என்று பாமர மக்களிடம் பணத்தை பறிக்கின்றனர்.

அபிராமம்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க டிசம்பர் 31-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்து தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இதை சாதகமாக பயன்படுத்தி ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் உள்ள தனியார் கணினி மையங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் பாமர மக்களிடம் அடாவடி வசூல் செய்வதாக கூறப்படுகிறது.

மின் இணைப்பு எண்ணு டன் ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின்கட்டணம் செலுத்த முடியும் என்றும், 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என்றும் பொதுமக்களை குழப்பி வருகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி தனியார் கணினி மையங்கள் வைத்துள்ள வர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க கூடுதலாக பணம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகை யில், அபிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, இதை சாதகமாக பயன்படுத்தி அபிராமத்தில் உள்ள கணினி மையம் வைத்துள்ள தனிநபர்கள் ஒரு மின் இணைப்பு எண்ணுக்கு ஆதாரை இணைக்க ரூ.50, ரூ.100, ரூ.150 என்று பாமர மக்களிடம் பணத்தை பறிக்கின்றனர்.

இதை கண்காணித்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News