உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணதொகை விரைவில் பெற்று தர நடவடிக்கை-கலெக்டர் விஷ்ணு சந்திரன்

Published On 2023-06-01 08:50 GMT   |   Update On 2023-06-01 08:50 GMT
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண ெதாகை விரைவில் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • கலெக்டர் விஷ்ணு சந்திரன் உறுதியளித்துள்ளார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி விவசாயி களிடம் 53 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

தொடர்ந்து கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

விவசாயிகளின் பிரதான கோரிக்கையான வரத்து கால்வாய் சீரமைத்தல், வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுத்தல், கருவேல் மரங்களை அப்புறப்படுத்துதல், விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின் வயர்கள் சரிசெய்தல், பழு தடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைத்தல் போன்ற கோரிக்கைகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து தொடர்புடைய துறைகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக ராமநாதபுரம் மாவட்டம் விவசாயத்தையே பிரதான தொழிலாக செயல்பட்டு வருகிறது. இதை மேலும் சிறப்புடன் செயல்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் விவசாயிகளுக்கு தேவை யான திட்டங்களை செயல்படுத்திட உறுதுணை யாக இருக்கும். விவசாயி களுக்கு நடப்பாண்டிற்கான வறட்சி நிவாரணத்தொகை விரைவில் பெற்று தர நட வடிக்கை மேற்கொள்ளப் படும்.இவ்வாறு அவர் பேசி னார்.

தொடர்ந்து வேளாண் துறை சார்பில் 50 சதவீத மானிய திட்டத்தில் 5 பயனாளிகளுக்கு ரூ.46.33 லட்சம் மதிப்பிலான டிராக்டர்களை கலெக்டர் விஷ்ணுசந்திரன் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சரஸ்வதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News