உள்ளூர் செய்திகள்

அரசு பஸ்-சரக்கு வேன் மோதி 5 பெண்கள் படுகாயம்

Published On 2022-12-05 06:56 GMT   |   Update On 2022-12-05 06:56 GMT
  • அரசு பஸ்-சரக்கு வேன் மோதியதில் 5 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
  • சிலர் ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாயல்குடி

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கீழசெல்வனூரில் இருந்து இன்று காலை விவசாய கூலி வேலைக்காக ஆட்களை ஏற்றி கொண்டு சரக்கு வேன் சாயல்குடிக்கு புறப்பட்டது.

அதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் நின்று கொண்டே பயணம் செய்தனர். கிழக்கு கடற்கரை சாலை மலட்டாறு அருகே வந்து கொண்டிருந்த போது சாயல்குடியில் இருந்து ராமநாதபுரம் சென்று கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக சரக்கு வேன் மோதி பயங்கரமாக உரசியது.

இந்த விபத்தில் சரக்கு வேனில் நின்று பயணம் செய்த கீழசெல்வனூரை சேர்ந்த முருகேசன் மனைவி பூமா (45), சோமு மனைவி ஞானசுந்தரி, ராஜலிங்கம் மனைவி முனியம்மாள், சண்முகம் மனைவி லட்சுமி, நாராயணன் மனைவி ஆபிதா ஆகிய 5 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இதில் அவர்களுக்கு கைகளில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. சிலர் ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சல்மோன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News