உள்ளூர் செய்திகள்

கடலில் விடப்பட்ட 48 லட்சம் இறால் குஞ்சுகள்

Published On 2023-08-09 12:44 IST   |   Update On 2023-08-09 12:44:00 IST
  • கடலில் 48 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டன.
  • ஏற்பாடுகளை மூத்த விஞ்ஞானி ஜான்சன் செய்திருந்தாா்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள மரைக்காயா்பட்டனம் பகுதியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் செயல் பட்டு வருகிறது.

இங்கு பிரதமா் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொறிப்பகத்தில் வளர்க் கப்பட்ட பச்சை இறால் குஞ்சுகள் கடலில் விடப் பட்டு வருகின்றன.

இந்த நிலையில் விஞ் ஞானி வினோத் தலை மையில் பொறிப்பகத்தில் வளா்க்கப்பட்ட 48 லட்சம் பச்சை இறால் குஞ்சுகளை படகில் எடுத்துச் சென்று பாக். ஜலசந்தி முனை பகுதியில் கடலில் விட்டனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரையில் 6.85 கோடி இறால் குஞ்சுகள் கடலில் விடப் பட்டுள்ளதாக மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்தனா். இதற்கான ஏற்பாடுகளை மூத்த விஞ்ஞானி ஜான்சன் செய்திருந்தாா்.

Tags:    

Similar News