உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா சார்பில் நடைபெற்ற 104-வது “மன் கி பாத்” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புத்தேந்தல் மாரிமுத்து பா.ஜனதா உறுப்பினராக இணைந்தபோது எடுத்த படம்.

பா.ஜனதா சார்பில் 104-வது "மன் கி பாத்" நிகழ்ச்சி

Published On 2023-08-28 11:03 IST   |   Update On 2023-08-28 11:03:00 IST
  • ராமநாதபுரம் பா.ஜனதா சார்பில் 104-வது “மன் கி பாத்” நிகழ்ச்சி நடந்தது.
  • மாவட்டம் முழுவதும் உள்ள பா.ஜனதா நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

ராமநாதபுரம்

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலம் "மன் கி பாத்" என்ற நிகழ்ச்சி வழி யாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இந்த உரை கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. அதன் 100-வது அத்தியாயம் நடப்பு ஆண்டில் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி நடந்தது.இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி 104-வது "மன் கி பாத்" நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா சார்பில் மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேசன் ஏற்பாட்டில் மாவட்ட முழுவதும் 170 இடங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மாவட்டம் முழுவதும் உள்ள பா.ஜனதா நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியை கண்டு களித்தனர். ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நமோ ஆப் தேசிய ஒருங்கி ணைப்பாளர் சைலேஷ் பாண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு "மன் கி பாத்" நிகழ்ச்சி குறித்து விளக்கவுரையாற்றினார்.

மாவட்ட பார்வையாளர் முரளிதரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சிவசங்கர், அரசு தொடர்பு முனியசாமி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் எஸ்.பி.குமரன், முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் பரமேஸ்வரன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஸ்ரீநாத், தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட தலைவர் ராஜ்கு மார், நகர் தலைவர் கார்த்திக், நகர் பொதுச் செயலாளர் பாக்யராஜ் மற்றும் பிரபு நவநீதன் உள்ளிட்ட ஏராளமான பா.ஜனதா நிர்வாகிகள், உறுப்பினர்கள் கொண்டனர்.

Tags:    

Similar News