உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

ராஜகிரி காமாட்சி அம்மன் கோவில் திருவிழா

Published On 2023-06-06 10:14 GMT   |   Update On 2023-06-06 10:14 GMT
  • இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா காட்சி நடைபெற்றது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாபநாசம்:

பாபநாசம் அடுத்த ராஜகிரியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் 19-வது ஆண்டு திருவிழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி ராஜகிரி குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம், பால்குடம், அழகு காவடி எடுத்து தப்பாட்டம், வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

இதனை அடுத்து மாலையில் மாவிளக்கு பூஜையும், இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா காட்சியும் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை அப்பகுதி நாட்டாண்மைகள், பஞ்சாயத்தார்கள், கிராமமக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், இளைய தலைமுறை நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News