உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ராஜா எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2023-10-24 08:47 GMT   |   Update On 2023-10-24 08:47 GMT
  • மருத்துவர்கள் கழிவு நீர் கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ராஜா எம்.எல்.ஏ.விடம் வலியுறுத்தினர்.
  • மக்களுக்கு மருத்துவ சிகிச்சை எந்த வித குறையும் இல்லாமல் நடக்க வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சுகாதார வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவர்கள் இங்கு கழிவு நீர் கால்வாய் வசதி, ஜெனரேட்டர் எந்திரம் மழையில் நனையாமல் இருக்க செட் அமைத்து தர வேண்டும், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு ராஜா எம்.எல்.ஏ. அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்படும் எனவும், மேலும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை எந்த வித குறையும் இல்லாமல் நடக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது தலைமை மருத்துவர் கிருஷ்ணவேணி மருத்துவர்கள் வேலம்மாள், பெப்சீர், நகராட்சி கமிஷனர் சபா நாயகம், சுகாதார ஆய்வாளர் மாரிசாமி, தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், ஜெயகுமார், வீரா, சங்கர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News