உள்ளூர் செய்திகள்
சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
- தண்ணீர் வடிகாலில் அதிக அளவில் சென்றது.
- அதிகாலை 3 மணிக்கு மழை நீர் வரத்து அதிகரித்து, வடிகால் நிரம்பி சாலையிலும் தண்ணீர் ஆறாக சென்றது .
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு கன மழை பெய்தது. இதனால் தண்ணீர் வடிகாலில் அதிக அளவில் சென்றது. அதிகாலை 3 மணிக்கு மழை நீர் வரத்து அதிகரித்து, வடிகால் நிரம்பி சாலையிலும் தண்ணீர் ஆறாக சென்றது . இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
சாலை ஓரத்தில் உள்ள பல கடைகளிலும் தண்ணீர் புகுந்து விட்டது. இதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் வந்து வடிகாலில் உள்ள அடைப்பை சரி செய்தனர். காலை 7 மணிக்கு மேல் தண்ணீர் வரத்து மெல்ல மெல்ல குறைந்ததால், சாலையில் சென்ற தண்ணீர் வடிந்து வருகிறது.