உள்ளூர் செய்திகள்

கிழக்கு கடற்கரையில் உள்ள பூமிஸ்வரர் கோவிலில் மழைநீர் சூழ்ந்துள்ளதை படத்தில் காணலாம்.

மரக்காணம் பகுதியில் மழை: 3500 ஏக்கர் உப்பளம் தண்ணீரில் மூழ்கியது

Published On 2022-11-01 07:16 GMT   |   Update On 2022-11-01 07:16 GMT
  • தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது.
  • 3500 ஏக்கர் உப்பளம் காலையில் பெய்த கனமழையால் மழை நீரில் மூழ்கியது.

விழுப்புரம்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்களே ஆன நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழை சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்னும் 4 நாட்கள் வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது.

வங்காள விரிகுடா பகுதியான மரக்காணத்தில் சுமார் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. எனவே வானிலை அறிவித்தபடி மரக்காணம் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் காலை 6 மணி முதல் விடாமல் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை மரக்காணம் மற்றும் மரக்காணத்தை சுற்றியுள்ள 60 கிராமங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் மரக்கா ணத்தில் உள்ள விவசாய நிலங்கள் ஏரி குளங்களில் நீர் வரத்து அதிகமாக வருகிறது. கன மழை கொட்டி வருவதால் விவசாய நிலங்களில் மழை நீர் கடல் போல் சூழ்ந்து ள்ளது.

இதனால் அந்த பகுதியில் நெல் மணிலா மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்தி ருக்கும் விவசாய பெருங்குடி வாழ் மக்கள் அனைவரும் பாதிப்புக்கு ள்ளாகி உள்ளனர். குறிப்பாக மரக்கா ணத்தில் உள்ள 3500 ஏக்கர் உப்பளம் காலையில் பெய்த கனமழையால் மழை நீரில் மூழ்கியது. இதனால் உப்பள உற்பத்தி நிறுத்தப்பட்டது. உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டதால் இந்த உப்பளத்தை நம்பி இருக்கும் 5000 தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அன்றாடம் வயிற்றுப் பிழப்பிற்கு அல்லோள்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மழை மரக்காணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அனுமந்தை, கீழ்புத்துப்பட்டு ,ஆலத்தூர், பிரம்மதேசம், எக்கியார்குப்பம் உள்ளிட்ட 60 கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் பாதிப்படைந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெய்து வரும் கனமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுகின்றனர்.

Tags:    

Similar News