உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு பல எளிய சோதனைகள் செய்து காண்பிக்கப்பட்டது.

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் வானவில் மன்றம்

Published On 2023-01-04 09:12 GMT   |   Update On 2023-01-04 09:12 GMT
  • மாணவர்கள் ஆர்வத்தோடு அச்சோதனைகளை செய்து பார்த்தனர்.
  • கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் புதிர் கணக்கு கொடுக்கப்பட்டது.

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் பட்டதாரி ஆசிரியர்கள் அருளானந்தம், துரைராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வானவில் மன்ற ஒன்றிய தன்னார்வலர் லாவண்யா, காற்றுக்கு அழுத்தம் உண்டு என்பதற்கும், காற்று இடத்தை அடைத்துக்கொள்ளும் என்பதற்கும் பல எளிய சோதனைகளை மாணவர்களிடையே செய்து காட்டினார்.

அப்போது மாணவர்கள் ஆர்வத்தோடு அச்சோதனைகளை செய்து பார்த்தனர்.

மேலும், கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் புதிர் கணக்கு கொடுக்கப்பட்டது. வானவில் மன்ற தன்னார்வ லரோடு மாணவர்கள் உற்சாக த்தோடும், ஆர்வத்தோடும் கலந்துரையாடினர்.

தன்னார்வலர் செய்து காட்டியவை அனைத்தும் பயனுள்ளதாக அமைந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் உமாராணி அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் முருகையன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News