உள்ளூர் செய்திகள்

மரம் சாய்ந்து கிடக்கும் காட்சி

திருக்குறுங்குடியில் சூறைக்காற்றுடன் மழை : பழமை வாய்ந்த மரம் சாய்ந்தது

Published On 2023-05-10 14:17 IST   |   Update On 2023-05-10 14:17:00 IST
  • திருக்குறுங்குடி பகுதிகளில் நேற்று மாலை இடி-மின்னலுடன் கோடை மழை கொட்டியது.
  • காற்றினால் திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இருந்த 200 ஆண்டு கால பழமை வாய்ந்த மாமரம் சாய்ந்தது.

களக்காடு:

திருக்குறுங்குடி பகுதிகளில் நேற்று மாலை இடி-மின்னலுடன் கோடை மழை கொட்டியது. அப்போது சூறை காற்றும் வீசியது. காற்றினால் திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இருந்த 200 ஆண்டு கால பழமை வாய்ந்த மாமரம் சாய்ந்தது. மரத்தில் கிளைகள் சுகாதார நிலையத்திற்கு செல்லும் பாதையை அடைத்த படி விழுந்தன. இதனால் நோயாளிகள் சுகாதார நிலையத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பாதிப்படைந்து உள்ளனர்.

காற்றில் சாய்ந்த மரத்தின் கீழ் நோயாளிகள் சீட்டு பெற்று காத்திருப்பார்கள். மரம் விழுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பும் நோயாளிகளும், பொதுமக்களும் மரத்தின் கீழ் அமர்ந்து இருந்தனர். மழை பெய்ய தொடங்கியதும் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதனை தொடர்ந்து அதிர்ஷ்டவசமாக நோயாளிகள் உயிர் தப்பினர். காற்றில் சாய்ந்த மரம் களக்காடு யூனியனுக்கு சொந்தமானது ஆகும். மரத்தை அகற்ற உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News